செவ்வாய், 4 மார்ச், 2025

தந்தை பெரியார் நினைவுச் சுவடுகள்

 தந்தை பெரியாரை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் செயல் படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், நினைவகங்கள், மய்யங்கள், நூல்கள், சிலைகள், கல்லூரிகள், விழாக்கள், திரைப்படம், விருதுகள் குறித்த தொகுப்பு பகுதி.

வாழ்க்கை வரலாறு நூல்


1. 'தமிழர் தலைவர்' என்கின்ற தலைப்பில் சாமி.சிதம்பரனார் என்பவரால் தொகுத்து எழுதப்பட்டு தந்தை பெரியாரால் மெய்ப்பு பார்க்கப்பட்டு 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
2. சாகித்ய அகாதெமி சார்பில் 2006ஆம் ஆண்டு 'இந்திய இலக்கிய சிற்பிகள்' வரிசையில் 'பெரியார் ஈ.வெ.ரா' என்கின்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது.(2006)

3. நெ.து.சுந்தரவடிவேலு  

அவர்களின்

 'புரட்சியாளர் பெரியார்

' என்கின்ற நூலை (1979) தமிழ் நாடு அரசின் 

தமிழ் வளர்ச்சித் துறை

 சார்பில் 2014 ஆம் ஆண்டு 

மறுபதிப்பு

 செய்து 

வெளியிடப்பட்டது.

4.புதுதில்லியிலிருந்து இயங்கும் 'நேஷ்னல் புக் டிரஸ்ட்' என்கின்ற நிறுவனம் சார்பில் 'விடுதலை பொன்விழா வரிசை' என்கின்ற வரிசையில் 'தந்தை பெரியார் வாழ்வும் தொண்டும்'என்கின்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது.(1997)


1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் தலையில் பெரியார் படம்
2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய அஞ்சல் தலையில் பெரியார் படம்.


பெரியார் சிலை, வைக்கம்
நினைவகங்கள்

ஈரோடு பெரியார் - அண்ணா நினைவு இல்லம்

தமிழ்நாடு அரசு (முதல்வர் கலைஞர்)தந்தை பெரியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் உட்கார்ந்த நிலையில் சிறிய அளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.இந்த இடம் அன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களால் நினைவகம் அமைக்க வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் வைக்கம் நகரில் தந்தை பெரியார் நினைவகம்

கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தமிழ்நாடு அரசால் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.

நினைவிடம்

சென்னை வேப்பேரியில் உள்ள திராவிடர் கழகத்தின் தலைமை இடமான பெரியார் திடல் எனப்படும் பெரியார் மய்யத்தில் 'பெரியார் அருங்காட்சியகம்' ஆய்வு நூலகமும் எணினி நூலகமும் உள்ளது. 1500.பேர் உட்காரக்கூடிய 'எம்.ஆர்.ராதா மன்றம்' என்கின்ற அரங்கம் உள்ளது. ஒரு பகுதியில் 'தந்தை பெரியாரின் நினைவிடம்' உள்ளது.

உருவச் சிலை

தந்தை பெரியாரின் நினைவிடத்தின் நுழைவு வாயிலில் 21 அடி உயர தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது.

திருச்சிராப்பள்ளியில் முதல் தலைமையிடம்

தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாட்டின் நடுநாயக நகரான திருச்சி யில் இயக்கத்திற்கென்று ஒரு தனி இடத்தை 1950 இல் வாங்கி, அதையே தனது தலைமையகம்போல் வைத்து, பிரச்சாரத்திற்கு அங்கிருந்தே சென்று திரும்பும் முறையைத் தனது பொது வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டிருந்தார்.

திருச்சியில் தந்தை பெரியாருக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கட்சி சார்பற்ற நகர மக்கள் குழு சார்பாக முழு உருவச் சிலை அமைக்கப்பட்டது... (17.9.1967)

நூற்றாண்டு விழா

தமிழ் நாடு அரசு (முதல்வர் எம.ஜி.ஆர்.) சார்பிலும் திராவிடர் கழகம் சார்பிலும் தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா (1979) நாடு முழுக்க கொண்டாடப்பட்டது.

பெரியார் மேளா

உத்திரபிரதேச மாநில தலை நகர் 'இலக்னோ' வில் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் 16,17,18 ஆகிய மூன்று நாள்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா 'பெரியார் மேளா' என்கின்ற பெயரில் நடைபெற்றது. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம் அவர்கள் ஏற்பாட்டில், அன்றைய முதல்வர் மாயாவதி அவர்கள் நடத்தினார்கள். திராவிடர் கழக பொதுச்செயலாளர் கி.வீரமணி ( தற்போது தலைவர்) அவர்கள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தியா முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான திராவிடர் கழகத் தோழர்கள்  தனி தொடர்வண்டி மூலமும் அதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி தோழர்கள் தனி தொடர்வண்டி மூலமும் வந்து பங்கேற்றனர்.

பெரியார் நினைவு சமத்துவ புரம்

1997 முதல் தமிழ்நாடு அரசு(முதல்வர் கலைஞர்) சார்பில் பெரியார் நினைவு சமத்துவ புரங்கள் அமைக்கப்பட்டன.முதல் சமத்துவபுரத்தை மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை.யில் 1998-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17- ஆம் நாள் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். 2011ஆம் ஆண்டு வரை 238 பெரியார் நினைவு சமத்துவபுரங்களை கலைஞர் கருணாநிதி ஏற்படுத்தினார்.

முதல் பெரியார் நகர்

சென்னை அடுத்த தம்பரம் பகுதியில், தொடர்வண்டி முனையம் எதிரில் தமிழ்நாட்டில் முதன் முதலாக பெரியார் நகர் உருவாக்கப்பட்டது. திருவொற்றியூர்.டி.சண்முகம் அவர்களால் இப் பெயர் சூட்டப்பட்டது.


(29.02.2016இல் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை)

பல்கலைக்கழகம் 

1.பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் (Periyar Maniammai University - PMUதஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லத்தில் 219 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 1988 ஆம் ஆண்டு கல்லூரியாக நிறுவப்பட்டது. பின்னர் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாறியது. இதன் வேந்தராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளார்.

2.பெரியார் பல்கலைக்கழகம் (சேலம்)

பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University) என்பது சேலத்தில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1997-ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கு தந்தை பெரியார் பெயரிடப்பட்டது. பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய அவையின் தரத்தினைப் பெற்றது.

தந்தை பெரியார் வழங்கிய நிதி மற்றும் இடத்தில் கல்லூரி (திருச்சி)


24.08.1965இல் திருச்சிராப்பள்ளியில் காஜாமலை என்கின்ற இடத்தில் தந்தை பெரியாரால் கல்வி வளர்ச்சிக்காக(கல்லூரி கட்ட) 5.5 இலட்ச ரூபாயும், 20 ஏக்கர் நிலமும் அரசுக்கு வழங்கப்பட்டதைக் கொண்டு கட்டப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அன்றைய முதலமைச்சர் மாண்புமிகு பக்தவச்சலம் அவர்கள் திறந்துவைத்தார். 2024 ஆண்டு திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி - தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெரியார் அரசு கலைக் கல்லூரி (கடலூர்)

பெரியார் அரசு கலைக் கல்லூரி (Periyar Government Arts College) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில்கடலூர் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[2] இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் அனுமதியுடன் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக இயங்கி வருகிறது. இக்கல்லூரி 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் சிதம்பரம்அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியாகச் செயல்படுகிறது.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி (தஞ்சாவூர்)

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி என்பது 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அரசு உதவி பெறும் நிறுவனமாகும். இது பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தால் நிதியுதவி செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) வகுத்துள்ள சட்டப்பூர்வ நெறிமுறைகள் மற்றும் நடத்தை விதிமுறைகளால் நிர்வகிக்கப்படுகிறது. இக் கல்லூரி தஞ்சாவூர், வல்லம்,பெரியார் நகர் பகுதியில் இயங்குகிறது.

பெரியார் பெண்கள் மருந்தியல் அறிவியல் கல்லூரி, தற்போது "பெரியார் மருந்தியல் அறிவியல் கல்லூரி" என மறுபெயரிடப்பட்டுள்ளது. இது சிறந்த சமூக சீர்திருத்தவாதியான தந்தை பெரியாரின் நினைவாக திருச்சிராப்பள்ளியில், பெரியார் மணியம்மை கல்வி மற்றும் தொண்டு சங்கத்தால் 1982 ஏப்ரல் 17 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் புது தில்லியில் உள்ள இந்திய மருந்தியல் கவுன்சில் (பிசிஐ) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது , மேலும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெரியார் பெண்கள் விடுதி என்பது கல்விச் சூழலைக் கொண்ட ஒரு இல்லமாகும், இக் கல்லூரி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், கே. சாத்தனூர் மெயின் ரோடு, திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு 620021 இந்தியா.என்கின்ற முகவரியில் இயங்குகிறது.


பெரியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி

சென்னை பெரம்பூர் பெரியார் நகரில், பெரியார் நகர் அரசு ஊழியர் கூட்டுறவு வீட்டு மனை விநியோக சங்கம், பெரியார் ஆங்கில நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியை ஜூன் 1981 இல் தொடங்கியது. சங்கத்தின் உறுப்பினர்கள், செயலகம் மற்றும் பிற அலுவலகங்களின் மாநில அரசு ஊழியர்கள் ஆவர்.

இந்தப் பள்ளி(பெரியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளி) 1986 ஏப்ரல் 1 ஆம் தேதி புதிதாக உருவாக்கப்பட்ட பெரியார் நகர் கல்வி மற்றும் தொண்டு சங்கத்திற்கு மாற்றப்பட்டது. பெரியார் நகர் கல்வி மற்றும் தொண்டு சங்கத்தின் உறுப்பினர்களும் மாநில அரசின் அலுவலர்கள் ஆவர்.

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், சுந்தர் நகர், கே கே நகர் அஞ்சல், திருச்சியில் 'பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி' என்கின்ற பெயரில், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி

தந்தை பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் பொருட்டு, தந்தை பெரியாரின் சிறந்த இலட்சியவாதியும், அவரது முன்னோடியுமான விடாமுயற்சியுள்ள தலைவர் டாக்டர் கி. வீரமணி தலைமையிலான சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தால் பல கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி 2007 ஆம் ஆண்டு வெட்டிக்காடு, ஒரத்தநாடு-தங்கரை, தஞ்சாவூர்-மாவட்டத்தில் உள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்கும் அவரால் நிறுவப்பட்டது.

புதுடெல்லி பெரியார் மய்யம்

1. பாம்நோலி

புதுடெல்லியிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாம்நோலி என்கின்ற இடத்தில் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5மாடி கட்டிடம் 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை' (திராவிடர் கழகம்)யால் கட்டப்பட்டு 'பாம்நோலி' 'பெரியார் மய்யம்கல்வெட்டு அன்றைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சத் அவர்களாலும், பெரியார் மய்ய வளாகம், உலக மனிதநேய அமைப்பின் தலைவர் லெவிஃபிராகல் அவர்களாலும் 01.10.2000 இல் திறந்துவைக்கப்பட்டது. இவ் விழாவில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து  தனி இரயில் மூலம்  1000த்திற்கு மேற்பட்டோர் புறப்பட்டு வந்தனர். இதில் கல்வி நிலையமும், மருத்துவ மனையும், நூலகமும், பெரியார் மியூசியமும் செயல்படுகிறது.

மீண்டும் பாம்நோலி பெரியார் மய்யம்

இந்த 'பாம்நோலி' 'பெரியார் மய்யம்' 03.12.2000 இல் நியாய விரோத - சட்ட விரோதமாகவும், அரசியல் உள்நோக்கத்துடன், நீதி மன்ற தடையாணையையும் மீறி அரசால் இடித்து தள்ளப்பட்டது. சட்டப் போராட்டங்களுக்குப் பின் மீண்டும் அதே இடத்தில் பெரியார் மய்யம் கட்டப்பட்டு செயல்பட்டுவருகிறது.

2. ஜசோலா

நீதி மன்ற ஆணையையும் மீறி வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசின் கட்டளையால், 'பாம்நோலி' பெரியார் மய்யம்' இடிக்கப் பட்டதற்கு நீதி கேட்டு போராடியதின் விளைவாக புதுடெல்லியில் 'ஜஸோலா' என்கின்ற இடத்தில் ஒரு ஏக்கர் அளவில் அரசால் நிலம் வழங்கப்பட்டது.  

அந்த இடத்தில் ஏறக்குறைய 64,000 அடி சதுர பரப்பில், 10கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5மாடி கட்டிடம் 'பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை' (திராவிடர் கழகம்)யால் கட்டப்பட்டு 'ஜஸோலா' 'பெரியார் மய்யம்'  அன்றைய தமிழ்நாடு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 02.05.2010 இல் திறந்துவைக்கப்பட்டது. இதில் கல்வி நிலையமும் மருத்துவ மனையும் செயல்படுகிறது.

திரைப்படம்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பாக 'பெரியார்' என்கின்ற தந்தை பெரியாரின் வாழ்க்கை பற்றிய திரைப்படம் தயாரிக்கப்பட்டு 2007 மே-1இல் திரையிடப்பட்டது..தமிழ்நாடு அரசு(முதல்வர் கலைஞர்) சார்பில் இதற்கு சிறிதளவு நிதியும் வழங்கப்பட்டது. திரைப்படம் 100 நாளை கடந்தது. பிறகு தெலுங்கு மொழியிலும் வெளியிடப்பட்டது.




பெரியார் பெயரில் விருதுகள்

1.தமிழ்நாடு அரசு(முதல்வர் ஜெ.ஜெயல்லிதா) சார்பில் 'பெரியார் சமூகநீதி விருது'  ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2.திராவிடர் கழகம் சார்பில் 'பெரியார் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

3.திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 'பெரியார் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

4.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 'பெரியார் ஒளி' விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

பெரியார் உலகம்

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில்  'பெரியார் உலகம்' என்கின்ற பெயரில் அறிவு வளர்ச்சி பூங்கா அமையவுள்ளது. அதில் 40 அடி உயர தாங்கு மேடையில் தந்தை பெரியாரின் 94 அடி உயர சிலை அமைக்கப்படவுள்ளது.

சிலையின் முன் மாதிரி
முதல் சிலை
#
செருப்பு வீசப்பட்ட இடத்தில் தந்தை பெரியாரின் சிலை
கடலூரில் தந்தை பெரியாரின் மீது முன்பு ஒரு முறை செருப்பு வீசப்பட்டது. செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் தந்தை பெரியார் உயிருடன் இருக்கும் போதே 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 13இல் கடலூரில் சிலை வைக்கப்பட்டது.

ஆந்திரா மாநிலத்தில் முதன்முதலாக
திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை
ஒன்றிணைந்த ஆந்திர மாநிலத்தில் 2006–ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தின் கடற்கரை சாலையில் தந்தை பெரியாரின் முதல் சிலையினை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்திட ஆந்திர மாநில அரசின் அமைச்சர்கள் நிகழ்வில் பங்கேற்றனர். ஆந்திர நாத்திக சங்கத்தின் (Atheist Society of India) முன்னெடுப்பில் நிறுவப்பட்டது இந்தச் சிலை..
தெலங்கானா மாநிலத்தில் முதன்முதலாக
திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை
டிசம்பர் 14 & 15 ஆகிய இருநாள்களும் தெலங்கானா – ஆந்திரா மாநிலங்களில் பரந்துபட்டு செயல்படும் மானவ விகாச வேதிகா எனும் மனித மேம்பாட்டு மன்றத்தின் 20-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. முதல் நாளான டிசம்பர் 14 அன்று மானவ விகாச வேதிகா அமைப்பின் வளாகத்தில் (தெலங்கானா) தந்தை பெரியாரின் சிலையினைக் காணொலி வாயிலாகத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து இரண்டு நாள் நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை ஆற்றினார்..

தெலங்கானா மாநிலம் 'பெல்லம்பள்ளி'யில் தந்தை பெரியார் சிலை 

தேசிய அறிவியல் நாளையொட்டி,

தெலங்கானா மாநிலம் பெல்லம்பள்ளியில் உள்ள அரசு பெண்கள் ஜூனியர் கல்லூரிகள் முன் முப்பெருமக்களின் சிலைகள் 28.2.2025 அன்று திறக்கப்பட்டன. அதில் ஒன்று தந்தை பெரியார் சிலை. 


அறிவியல் அருங்காட்சியகம் (மியூசியம்)
தமிழ்நாடு அரசு 17.09.1990இல் சென்னை கோட்டூரில் 'பெரியார் அறிவியல் தொழில் நுட்ப மையம்' என்கின்ற பெயரில் அறிவியல் அருங்காட்சியகம் (மியூசியம்) அமைத்துள்ளது.

திருச்சியில்  பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி

''திருச்சியில்  பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி’’ – முதலமைச்சர் அண்ணா அடிக்கல் நாட்டினார்!

அந்நாளில், திருச்சி மாவட்ட மருத்துவ மனையில் குழந்தைகள் நலப் பிரிவு இல்லை என்பதால், அந்நாள் மருத்துவ இயக்குநர் (DMS) திருமதி மரைக்காயர் வழியாக அய்யாவிடம் நன்கொடை தேவை பற்றி, ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் தமிழ்நாடு  அரசு, வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, ஒரு லட்சம் ரூபாய் பெரியார் அறக்கட்டளை மூலம் அளித்தார் தந்தை பெரியார்.  அப்போது அறிஞர் அண்ணா முதலமைச்சர்; எஸ்.ஜே.சாதிக்பாட்சா மருத்துவத் துறை அமைச்சர்.

அதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்ற ஒரு நாள் மாலையில் நடைபெற்றது. அந்நிகழ்வில், தமது அமைச்சரவையின் ஒன்பது அமைச்சர்களும் கட்டாயம் கலந்துகொள்ள முதலமைச்சர் அண்ணா தாக்கீது விடுத்து, மிக அருமையானப் பொழிவினைத் தந்து ‘‘பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி’’ அமைக்கக் காரணமானார்.

பெரியார் மருத்துவமனை, சென்னை கொளத்தூர்

சென்னை கொளத்தூர்பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.. சில சிறப்பு சிகிச்சை களை வழங்குவதற்காக கூடுதலாக மூன்று தளங்களுடன் விரிவாக்கம் செய்திட 20024ஆம் ஆண்டு மார்ச் மாதம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ஆறு தங்களுடன் கட்டப் பட்டுள்ள இப்புதிய மருத்துவமனையை பெரியார் மருத்துவமனை என்று பெயரிட்டு  27.02.2025 மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்துவைத்தார். 

பஞ்சப்பூர் பெரியார் காய்கறி அங்காடி- திருச்சி

பஞ்சப்பூரில் உலகத் தரம் வாய்ந்த (காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க) ‘‘பஞ்சப்பூர் பெரியார் காய்கறி அங்காடி’’ என்று பெயர் சூட்டப்பட்டு, அதில் வணிக வளாகம், லாரி ஓட்டுநர்கள் தங்கி ஓய்வெடுத்து பயணத்தைத் தொடருவதற்கு கனரக சரக்கு வாகன முனையம், (மேலை நாடுகளுக்கு இணையாக பல்வேறு வசதிகள் கொண்டது) நமது முதல மைச்சர் நிதி ஒதுக்கியதன்மூலம் அமைக்கப்பட்டுள்ள, அதிசயிக்கத்தக்க சாதனை.
வாயிலில் மூன்று தலைவர்கள் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என கம்பீரமாகக் காட்சியளிக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் அறிக்கை

ஆசிரியர் அறிக்கை

கடைசியாக திருத்தப்பட்ட நாள்; 24.05.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தந்தை பெரியார் நினைவுச் சுவடுகள்

  தந்தை பெரியாரை பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும் நினைவு கூறும் வகையிலும் செயல் படுத்தப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், நினைவகங்கள், மய்யங்கள், நூல்க...